ஆண் வேடமிட்டுப் பயிற்சி செய்த பெண் வெள்ளிப் பதக்கம் வென்றார்
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Bryan Foo
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சைக்கிளோட்ட வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் 23 வயது ஃபரிபா ஹஷிமி (Fariba Hashimi).
பதின்ம வயதில் பயிற்சி செய்தபோது தம் மீது கல் எறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆண் வேடமிட்டு பயிற்சி செய்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பெண்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஹஷிமி ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறினார்.
இத்தாலியில் வசிக்கும் அவர் அங்கேயே பயிற்சி பெறுகிறார்.
கனவு காணும் பெண்களைத் தமது நாடு தாக்குகிறது; அதை எதிர்த்துப் போராடியதில் மகிழ்ச்சி என்று ஹஷிமி சொன்னார்.
அடுத்த தலைமுறையினர் விளையாட்டுப் போட்டிகளில் பயமின்றி ஆப்கானிஸ்தானைப் பிரதிநிதிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதாரம் : AFP