Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுகள் சிங்கப்பூருக்கு 2ஆவது தங்கம் உறுதி

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுகள் சிங்கப்பூருக்கு 2ஆவது தங்கம் உறுதி

(படம்: Commonwealth Games Singapore/Andy Chua, Bradley Collyer/PA via AP)

காமன்வெல்த் விளையாட்டுகளின் மகளிர் ஒற்றையர் பிரிவு மேசைப்பந்துப் போட்டியில் சிங்கப்பூருக்கு 2ஆவது தங்கப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

சிங்கப்பூரின் ஃபெங் தியென்வேயும் (Feng Tianwei) செங் ஜியென்னும் (Zeng Jian) இறுதிச்சுற்றில் மோதவுள்ளனர்.

செங் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லியூ யாங்ஸீயை (Liu Yangzi) 4-2 என்ற ஆட்டக் கணக்கில் வென்றார். ஆட்ட விவரம்: 7-11, 7-11, 12-10, 11-4, 11-6, 11-9.

ஃபெங் மிகவும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அவர் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலாவை 4-3 என்ற ஆட்டக் கணக்கில் வென்றார். ஆட்ட விவரம்: 11-6, 8-11, 6-11, 11-9, 11-8, 8-11, 12-10.

இறுதிச்சுற்று நாளை (7 ஆகஸ்ட்) நடைபெறவுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூர் இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது.

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 போட்டிகளை meWATCH தளத்தில் நேரடியாகக் காணலாம். www.mewatch.sg/cwg2022 எனும் தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்!

பார்க்கத் தவறிய விளையாட்டுகளின் முக்கியத் தருணங்களை YouTube தளத்தின் Mediacorp Entertainment வழி கண்டுரசிக்கலாம்!

ஆதாரம் : CNA/fh(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்