Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கண்ணீரோடு ஓய்வுபெற்றார் பார்சலோனா நட்சத்திரம் இனியெஸ்டா

வாசிப்புநேரம் -

முன்னாள் பார்சலோனா (Barcelona), ஸ்பெயின் (Spain) காற்பந்து அணிகளின் நட்சத்திர ஆட்டக்காரர் இனியெஸ்டா (Iniesta ) ஓய்வுபெறுகிறார்.

அவருக்கு வயது 40.

ராய்ட்டர்ஸ் அந்தச் செய்தியை வெளியிட்டது. 

24 ஆண்டுகள் நீடித்த காற்பந்துப் பயணத்தில் மத்தியத் திடல் ஆட்டக்காரராக அவர் வென்ற விருதுகளில் சில:

- 1 உலகக் கிண்ணம் 
- 2 ஐரோப்பியக் கிண்ணங்கள்
- 9 La Liga கிண்ணங்கள்
- 4 Champions League கிண்ணங்கள்

இனியெஸ்டா ஸ்பெயின் காற்பந்து அணிக்காக 131 முறை களமிறங்கியுள்ளார். 

2010ஆம் ஆண்டு நெதர்லந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண இறுதியாட்டத்தில், ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டு ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

ஸ்பெயின் வென்ற ஒரே உலகக் கிண்ணம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

44 வருடங்களாய் எந்தக் கிண்ணத்தை வெல்லாத ஸ்பெயின் 2008ஆம் ஆண்டில் முதன்முறையாக ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றது. 

அதற்கு முக்கியக் காரணம் அவர்தான். 

கண்களில் நீரோடு பிரியாவிடை பெற்ற இனியெஸ்டா இது சோகம் அல்ல ஆனந்தம் என்றார். 

உறுதியும் உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும் என்பது காற்பந்து தமக்குக் கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடம் என்றார் அவர். 

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்