அர்ஜென்ட்டினா - ஸ்பெயின் இறுதியாட்டத்துக்குப் பின் மோதல் - மன்னிப்புக் கேட்ட துணைப் பயிற்றுவிப்பாளர்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Hannah Mckay
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்தாட்ட இறுதி ஆட்டம் முடிந்ததும் திடலில் மோதலில் ஈடுபட்டதற்காக அர்ஜென்ட்டினா துணைப் பயிற்றுவிப்பாளர் ரொபெர்டோ அயாலா (Roberto Ayala) மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ஸ்பெயின் விளையாட்டாளர் டானி ஒல்மொவுடன் (Dani Olmo) அவர் சர்ச்சையில் ஈடுபட்டார்.
பொறுப்பில் இருந்து கொண்டு அதுபோன்ற நடத்தையில் ஈடுபட்டதற்கு அயாலா வருத்தம் தெரிவித்தார்.
ஒல்மொவைத் தள்ளியதாகச் சொன்ன அவர், அவரைக் குத்தவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
அர்ஜென்டினாவின் நஹுவேல் மோலினா (Nahuel Molina) தியாகோ அல்மடா (Thiago Almada) ஆகியோரும் மோதலில் ஈடுபட்டனர்.
அர்ஜென்ட்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ் (Leandro Paredes) ஸ்பெயினின் எரிக் கார்சியாவின் (Eric Garcia) கழுத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
"அவர்களைப் பிரிக்கத்தான் சென்றேன். ஆனால் சில நேரங்களில் சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிவிடும்.
அப்போது உணர்ச்சிவசப்படலாம். அதற்காக நான் சாக்குப்போக்குச் சொல்லவில்லை," என்றும் அயாலா தெரிவித்தார்.
ஆட்டத்துக்குப் பிறகு ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரிக்க ஒழுங்கு, நெறிமுறைப் பிரிவு வழக்கறிஞரை ஃபிஃபா (FIFA) நியமித்துள்ளது.
வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உட்பட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இடைநீக்கம் செய்யப்படலாம்.
அர்ஜென்ட்டினா காற்பந்துச் சங்கத்துக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Reuters