வரலாறு படைத்த சீருடையை மீண்டும் தேர்வு செய்த அர்ஜென்ட்டினா
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக்கிண்ண அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அர்ஜென்ட்டினா தனது பாரம்பரிய நீல -வெள்ளை நிறச் சீருடைக்குப் பதிலாக அடர் நீல நிறச் சீருடையை அணியவுள்ளது.
அந்தச் சீருடை அர்ஜென்ட்டினாவுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நீண்டகாலமாக உள்ளது.
1986 உலகக் கிண்ணக் காலிறுதியில், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியபோது அர்ஜென்ட்டினா இதே அடர் நீல நிறச் சீருடையை அணிந்திருந்தது.
அந்த ஆட்டத்தில்தான் டியேகோ மரடோனா (Diego Maradona) புகழ்பெற்ற 'ஹேண்ட் ஆஃப் காட்' (Hand of God) கோலையும், 'நூற்றாண்டின் கோல்' என்று போற்றப்படும் கோலையும் அடித்தார்.
1998 உலகக்கிண்ணத்திலும் இங்கிலாந்தை பெனால்ட்டி முறையில் தோற்கடித்தபோது அர்ஜென்ட்டினா இதே நிறச் சீருடையை அணிந்திருந்தது.
இதுகுறித்துப் பேசிய இங்கிலாந்துப் பயிற்றுவிப்பாளர் தாமஸ் துசெல் (Thomas Tuchel) மூடநம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருந்தால் தாமும் அதே முடிவை எடுத்திருக்கலாம் என்றார்.
உயர்நிலைப் போட்டிகளிலும் இதுபோன்ற நம்பிக்கைகள் இயல்பானவை என்றும் தமக்கும் சில அதிர்ஷ்ட நம்பிக்கைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சீருடையைத் தேர்வு செய்தது குறித்துத் தமக்குத் தெரியாது என்று அர்ஜென்ட்டினா பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி (Lionel Scaloni) தெரிவித்தார்.
அர்ஜென்ட்டினாவின் அடர் நீல நிறச் சீருடை போனஸ் அயர்ஸின் (Buenos Aires) பாரம்பரிய 'ஃபிலிடேயாடோ' (Fileteado) கலை வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முறை மீண்டும் அதே சீருடையை அணியும் அர்ஜென்ட்டினா இங்கிலாந்துக்கு எதிராக வரலாறு மீண்டும் திரும்பும் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது.

ஆதாரம் : Reuters