Skip to main content
Community Shield
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

Community Shield - வென்றது ஆர்சனல்

வாசிப்புநேரம் -
Community Shield - வென்றது ஆர்சனல்

படம்: Reuters/Chris Radburn

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இங்கிலாந்து FA கம்யூனிட்டி ஷீல்ட் (Community Shield) ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு பருவமும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி தொடங்குவது முன் Community Shield நடைபெறுவது வழக்கம்.

அது ஒரு கெளரமிக்கத் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

சென்ற பருவத்தில் முதல், இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிகள் இந்தப் போட்டியில் களம் இறங்கும்.

அந்த வகையில் முதல் இடத்தைப் பிடித்த ஆர்சனலும் இரண்டாவது இடத்தைப் பிடித்த மென்செஸ்ட்டர் சிட்டியும் நேற்றிரவு (16 ஆகஸ்ட்) மோதின.

கம்யூனிட்டி ஷீல்ட் போட்டியில் இதுவரை ஆர்சனல் நான்கு முறை மென்செஸ்ட்டர் சிட்டியை வென்றுள்ளது.

போட்டி நேற்று வேல்ஸ் (Wales) தலைநகர் கார்டிஃபில் (Cardiff) நடந்தது.

ஆட்டம் தொடங்கி 23 விநாடியிலேயே ரிக்கார்டோ கலாஃபியோரி (Riccardo Calafiori) ஆர்சனலின் முதல் கோலைப் போட்டார்.

போட்டியில் தன் ஆதிக்கத்தை ஆர்சனல் நிலைநாட்டியது.

28ஆவது நிமிடத்தில் முன்னணி ஆட்டக்காரர் காய் ஹாவர்ட்ஸ் (Kai Havertz) இரண்டாவது கோலை அடித்தார்.

48ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் மார்ட்டின் ஓடகார்ட் (Martin Odegaard) மூன்றாவது கோலைப் போட்டு ஆர்சனலின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்