Skip to main content
ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டியில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டியில் - சிங்கப்பூரை வீழ்த்தியது தாய்லந்து

வாசிப்புநேரம் -

ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டியில் சிங்கப்பூருக்கும் தாய்லந்துக்கும் இடையில் நேற்றிரவு (17 டிசம்பர்) நடைபெற்ற ஆட்டத்தில், தாய்லந்து 4-2 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது.

ஆட்டத்தின் முதல் இரண்டு கோல்களைப் போட்டுத் தாய்லந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது சிங்கப்பூர்.

பின்னர் விழித்துக்கொண்ட தாய்லந்து, அடுத்தடுத்து நான்கு கோல்களைப் புகுத்தி வெற்றியை உறுதிசெய்தது.

A-பிரிவில், தாய்லந்து 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 6 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் இருக்கிறது. கம்போடியாவும் மலேசியாவும் 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

சிங்கப்பூர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற இன்னமும் வாய்ப்பு உள்ளது.

சிங்கப்பூர் அணி நாளை மறுநாள் (20 டிசம்பர்) மலேசியாவுடன் பொருதக் கோலாலம்பூர் செல்கிறது.

அந்த ஆட்டத்தில் வெற்றி அல்லது சமநிலை கிடைத்தால் போதும், சிங்கப்பூர் அரையிறுதிக்கு முன்னேறிவிடலாம்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்