Skip to main content
ஆசியான் காற்பந்துப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆசியான் காற்பந்துப் போட்டி - ஆட்ட மோசடி நடைபெற்றதா?

வாசிப்புநேரம் -
கம்போடியாவின் காற்பந்துச் சம்மேளனம், ஆட்ட மோசடி தொடர்பான விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

Khmer Times நாளேடு அந்தத் தகவலை வெளியிட்டது.

மூன்று நாள்களுக்கு முன் ஆசியான் விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடி கம்போடிய அணி தோல்வியுற்றது.

முன்னைய ஆட்டங்களைவிட ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வழக்கத்திற்கு மாறானவை தென்பட்டதாகச் சம்மேளனம் Facebookஇல் குறிப்பிட்டது.

சம்மேளனம் எந்த ஆட்டத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. விசாரிக்கப்படும் விளையாட்டாளரின் பெயரையும் வெளியிடவில்லை.

சிங்கப்பூர் அணியுடன் நடந்த ஆட்டத்தில் கம்போடிய கோல் காவலர் இரண்டு தவறுளைப் புரிந்ததால் சிங்கப்பூர் அணி கோல்களைப் புகுத்தியதாகச் சில ரசிகர்கள் ஊகிக்கின்றனர்.

CNA, சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்திடமும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களிடமும் கருத்துகள் கேட்டுள்ளது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்