Skip to main content
ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டி - ஆயத்தமாகும் சிங்கப்பூர் அணி

வாசிப்புநேரம் -
ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டி - ஆயத்தமாகும் சிங்கப்பூர் அணி

(படம்:Matthew Mohan) 

சிங்கப்பூர்த் தேசியக் காற்பந்து அணி, இவ்வாண்டு ஜூலையில் நடைபெறவுள்ள ஆசியான் வெற்றியாளர் போட்டிக்காக இப்போதிருந்தே தயாராகத் தொடங்கியுள்ளது.

கவின் லீ (Gavin Lee) அணியின் நிரந்தரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் சந்திக்கவிருக்கும் முதல் போட்டி இது.

என்றாலும் அவருக்குத் தற்காலிகப் பயிற்றுவிப்பாளராய் அணியுடன் பணியாற்றிய அனுபவம் உண்டு.

2027ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறவும் லீ உதவினார்.

ஆசியான் வெற்றியாளர் போட்டியில் சிங்கப்பூர் A பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வியட்நாம், இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளும் அதே பிரிவில் உள்ளன.

திமோர் வெஸ்ட்டே அல்லது புருணை அதே பிரிவில் சேரலாம்.

B பிரிவில் தாய்லந்து, மலேசியா, பிலிப்பீன்ஸ், மியன்மார், லாவோஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

ஆசியான் வெற்றியாளர் போட்டியில் கடைசியாக 2012இல் சிங்கப்பூர் வாகை சூடியது.

அதற்குப் பிறகு வட்டார விருது எதனையும் அது பெறவில்லை.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்