Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இன்றிரவு ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்று

வாசிப்புநேரம் -
ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்று இன்றிரவு நடைபெறுகிறது.

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் தாய்லந்தும் வியட்நாமும் இரவு 9 மணிக்குப் பொருதவிருக்கின்றன.

இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டம் இது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில், இரண்டுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் வியட்நாம் தாய்லந்தைத் தோற்கடித்தது.

முதல் ஆட்டம் வியட்நாமில் கடந்த வியாழக்கிழமை (2 ஜனவரி) நடந்தேறியது.

வியட்நாமின் ரஃபேல்சன் (Rafaelson) அணியை வெற்றிக்கு இட்டுச்செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாம் அரையிறுதியில் சிங்கப்பூருக்கு எதிரான இரண்டு ஆட்டங்களில் ரஃபேல்சன் மூன்று கோல்களை அடித்தார்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் ஆட்டத்தின் முடிவில் எந்த அணி வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் செல்லும் என்பது தெரிந்துவிடும்.

ஆட்டத்தை நேரடியாக mewatch செயலியில் கண்டுகளிக்கலாம்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்