ஆசியான் உடற்குறையுள்ளோர் போட்டி - சிங்கப்பூருக்கு 2 தங்கம்
This audio is generated by an AI tool.
தாய்லந்தின் கொராட் நகரில் நடைபெறும் ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
சபஸ்டியன் டான் (Sebastian Tan) சைக்கிளோட்டத்தில் தங்கம் வென்றார்.
சிங்கப்பூர் அணி சைக்கிளோட்டத்தில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை.
உருட்டுப்பந்து விளையாட்டில் 804 புள்ளிகளைப் பெற்ற கெல்வின் கோ (Kelvin Goh) தங்கம் வென்றார்.
ஆடவர் 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் டோ வேய் சூங் (Toh Wei Soong) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பிலிப்பீன்ஸுக்குத் தங்கம்.
மகளிர் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் டேனியல் மோய்க்கு (Danielle Moi) வெள்ளிப் பதக்கம்.
முதலிடம் பிடித்தார் இந்தோனேசிய வீராங்கனை.