ஆசியான் கிண்ணக் காற்பந்து - இறுதிச் சுற்றில் வியட்நாம்
வாசிப்புநேரம் -
ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூருக்கும் வியட்நாமுக்கும் இடையே நடந்த இரண்டாவது ஆட்டத்தில் வியட்நாம் அணி வெற்றிபெற்றது.
3-1 எனும் கோல் கணக்கில் அது வென்றது.
வியட்நாம் ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி வாகை சூடியது.
சிங்கப்பூர் தற்போது ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
வியட்நாம் அணி இறுதிச் சுற்றில் தாய்லந்து அல்லது பிலிப்பீன்ஸ் அணியைச் சந்திக்கும்.
தாய்லந்தும் பிலிப்பீன்ஸும் இன்று (30 டிசம்பர்) அரையிறுதிச் சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் மோதுகின்றன.
சென்ற வெள்ளிக்கிழமை (27 டிசம்பர்) நடந்த முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பீன்ஸ் வெற்றிபெற்றது.
52 ஆண்டுகளில் முதல்முறையாக அது சாத்தியமானது.

ஆதாரம் : CNA