Skip to main content
ஆசியக் கிண்ணக் காற்பந்து: சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆசியக் கிண்ணக் காற்பந்து: சிங்கப்பூர் - இந்தியா சமநிலை

வாசிப்புநேரம் -
ஆசியக் கிண்ணக் காற்பந்து: சிங்கப்பூர் - இந்தியா சமநிலை

(படம்: CNA/Wallace Woon)

ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தகுதிச் சுற்றில் சிங்கப்பூரும் இந்தியாவும் பொருதிய ஆட்டம் 1-1 எனும் கோல்கணக்கில் சமநிலையில் முடிந்துள்ளது.

ஆட்டம் நேற்று சிங்கப்பூரின் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆட்டத்தின் முதல் கோலைச் சிங்கப்பூரின் இக்சான் பாண்டி (Ikhsan Fandi) புகுத்தினார்.

இரண்டாம் பாதியில் இந்தியாவின் ரஹீம் அலி (Rahim Ali) கோலைப் புகுத்தி ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

ஆட்டத்தைக் காண சுமார் 13,300 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (14 அக்டோபர்) சிங்கப்பூரும் இந்தியாவும் மீண்டும் பொருதும்.

ஆட்டம் கோவாவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்