Skip to main content
சிங்கப்பூர் அணிக்கு ஆதரவாக ஹாங்காங் சென்றுள்ள ரசிகர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

சிங்கப்பூர் அணிக்கு ஆதரவாக ஹாங்காங் சென்றுள்ள ரசிகர்கள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் அணிக்கு ஆதரவாக ஹாங்காங் சென்றுள்ள ரசிகர்கள்
(கோப்புப் படம்: Matthew Mohan)
வெளியீடு : 18 Nov 2025 08:41AM புதுப்பிப்பு : 18 Nov 2025 11:27AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காற்பந்து ரசிகர்கள் முக்கியமான ஆசியக் கிண்ணத் தகுதிச்சுற்று போட்டியை நேரடியாகக் காண ஹாங்காங்கிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் அனுபவம் என்று அவர்கள் விவரித்துள்ளனர்.

சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான ஆட்டம் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும்.

சிங்கப்பூர் அணிக்கு ஆதரவு அளிக்க ஹாங்காங்கின் காய் டக் (Kai Tak) விளையாட்டு அரங்கில் சுமார் 2,000 சிங்கப்பூரர்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கில் உள்ள சிங்கப்பூர் வர்த்தகச் சபை, பள்ளி மாணவர்கள் உள்பட 650 சிங்கப்பூரர்களை ஆட்டத்திற்கு அனுப்ப நிதி திரட்டியுள்ளது.

சிங்கப்பூரும் ஹாங்காங்கும் Group C பிரிவில் முதல் 2 நிலையில் உள்ளன.

இரு நாடுகளும் தரப்புக்கு 8 புள்ளிகளைக் கொண்டுள்ளன.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்