ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்று - பங்களாதேஷை வீழ்த்தியது சிங்கப்பூர்

(படம்: Football Association of Singapore)
ஆசியக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்றில் சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் 2க்கு 1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் வெற்றி பெற்றுள்ளது.
பங்களாதேஷின் டாக்கா நகரில் ஆட்டம் இடம்பெற்றது.
சிங்கப்பூர்க் குழுவின் விளையாட்டாளர்கள் சொங் யூ யங் (Song Ui-young), இக்சான் ஃபாண்டி (Ikhsan Fandi) ஆகியோர் கோல்களைப் புகுத்தினர்.
C குழுவுக்கான பட்டியலில் இப்போது சிங்கப்பூர் அணி 4 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது.
C குழுவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் ஹாங்காங்கும் பங்களாதேஷும் உள்ளன.
கடைசி இடத்தில் இந்தியா இருக்கிறது.
குழுவின் முதல் இடத்தில் இருக்கும் அணி 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெறும்.
சிங்கப்பூர் அடுத்து இந்தியாவுடன் அக்டோபர் மாதம் மோதும்.