Skip to main content
ஆசியக் கிண்ணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆசியக் கிண்ணம் - பங்களாதேஷை வீழ்த்தியது சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
ஆசியக் கிண்ணம் - பங்களாதேஷை வீழ்த்தியது சிங்கப்பூர்

(படம்: CNA/Matthew Mohan)

வெளியீடு : 01 Apr 2026 09:04AM புதுப்பிப்பு : 01 Apr 2026 12:08PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர், பங்களாதேஷ் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் விளையாடுவதற்கு முன்பே ஆசியக் கிண்ணப் போட்டிக்கு சிங்கப்பூர் தகுதி பெற்றுவிட்டது.

ஆட்டம் நேற்றிரவு (31 மார்ச்) தேசிய அரங்கில் நடைபெற்றது.

சுமார் 30,000 ரசிகர்கள் முன்னிலையில் பங்களாதேஷை வீழ்த்தி சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது சிங்கப்பூர்.

சிங்கப்பூர் அணி தனது பிரிவில் 11 புள்ளிகளுடன் முதல் நிலையில் உள்ளது.

ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு (2027) சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.

ஜப்பான், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட அணிகளை எதிர்த்து சிங்கப்பூர் களம் காணும்.

இதற்கிடையே சிங்கப்பூரில் காற்பந்து விளையாட்டுக்கு உற்சாகமூட்ட Sea தொழில்நுட்ப நிறுவனம் 50 மில்லியன் வெள்ளி வழங்க உறுதியளித்துள்ளது.

Sea நிறுவனம் Shopee மின் வணிகத் தளத்தை நிர்வகிக்கிறது.

நிதியைத் திறம்படப் பயன்படுத்த அரசாங்கத்துடனும் காற்பந்துச் சமூகத்தினருடனும் அணுக்கமாகச் செயல்படவுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்