Skip to main content
eSports போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

eSports போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்

வாசிப்புநேரம் -
eSports போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்

(கோப்புப் படம்: MOHD RASFAN / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசிய விளையாட்டுகளின் eSports போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த மூ சின்யூவே (Mu Xinyue).

20 வயது மூ, 23 பேர் உள்ள eSports குழுவின் ஓர் உறுப்பினர்.

Identity V எனும் விளையாட்டில் மூவின் முக்கியப் பங்கு அவருடைய குழுவுக்கு வெற்றியைத் தந்தது.

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்ற போட்டியில், ஜப்பானை வீழ்த்தியது சீனா.

ஆண்கள் அதிகம் கலந்துகொள்ளும் eSports போட்டிகளில் பெண்களின் பங்களிப்பு சுமார் 3 விழுக்காடு.

534 வீரர்களில் 14 பேர் மட்டுமே பெண்கள்.

"என் வாழ்வில் இது மிக மகிழ்ச்சியான தருணம்" என்று மூ பெருமிதத்துடன் சொல்வதை Xinhua செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

“ஆணோ பெண்ணோ போட்டியிடத் தேவையான திறமை இருந்தால் போதும்" என்றும் மூ சொன்னார்.

மூவாண்டுக்கு முன் ஹாங்சோவில் (Hangzhou) நடந்த ஆசியப் போட்டியில் eSports விளையாட்டு முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்