Skip to main content
ஆசிய விளையாட்டுப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி - ஊக்கமருந்து உட்கொண்ட தாய்லந்து வீராங்கனை

வாசிப்புநேரம் -
ஆசிய விளையாட்டுப் போட்டி - ஊக்கமருந்து உட்கொண்ட தாய்லந்து வீராங்கனை

(கோப்புப் படம்: BAY ISMOYO / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தாய்லந்தின் பாட்மிண்டன் வீராங்கனை ஊக்கமருந்து உட்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

அவர் 19 வயது பிச்சாமோன் ஓபட்னிபுத் (Pitchamon Opatniputh).

போட்டி ஜப்பானில் நடைபெறுகிறது.

போட்டியாளர் ஒருவர் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டறியப்படுவது இதுவே முதல்முறை.

தடைசெய்யப்பட்ட Furosemide மருந்தை பிச்சாமோன் உட்கொண்டது சோதனையில் உறுதியானது.

Furosemide உடலில் உள்ள நீரை விரைவாக வெளியேற்றி எடையைக் குறைக்க உதவும்.

பிச்சாமோன்இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலகச் சோதனை அமைப்பு (ITA) நேற்று தெரிவித்தது.

உலகத் தரவரிசையில் அவர் 18வது இடத்தில் இருக்கிறார்.

இன்று சீனாவுக்கு எதிரான குழுப் போட்டியில் பிச்சமோன் களமிறங்கவிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை (17 செப்டம்பர்) நடத்தப்பட்ட சோதனையில் அவர் பிடிபட்டார்.

பிச்சாமோன் ஆசியப் போட்டிகளின் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்