Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைப்பு

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைப்பு

(படம்: Saeed Khan / AFP)

ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படுகிறது.

நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக, மொத்தமுள்ள பார்வையாளர் எண்ணிக்கையில் 50 விழுக்காட்டினர் மட்டுமே போட்டிகளைக் காண அனுமதிக்கப்படுவர்.

மெல்பர்ன் நகரில் கிருமிப்பரவல் மோசமாகி வருகிறது.

போட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் அனைவரும், உணவு உண்ணும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.

சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளும் அங்கு நடப்பில் இருக்கும். 

நேற்று மெல்பர்ன் நகரில் 37,169 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. மேலும் 25 பேர் மாண்டனர்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில், ஆண்கள் பிரிவின் நடப்பு வெற்றியாளர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) பங்கேற்பது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்கிறது. 

கடந்த வாரம் விசா விண்ணப்பத்தில் கோளாறு இருந்ததாகக் கூறி, ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் அவரைத் தடுத்து வைத்திருந்தனர்.

இருப்பினும் அவரது வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கில் வெற்றிபெற்று, கடந்த திங்கட்கிழமை திரு. ஜோக்கோவிச் விடுவிக்கப்பட்டார்.

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa