30 மணிநேரத்திற்கும் மேல் அலையாடிச் சாதனை படைத்த ஆஸ்திரேலியர்!

(Saeed KHAN / AFP)
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ஆக நீண்ட நேரம் அலையாடலில் (surfing) ஈடுபட்டு இன்று (17 மார்ச்) உலகச் சாதனை படைத்துள்ளார்.
40 வயது பிளேக் ஜான்ஸ்டன் (Blake Johnston) 30 மணிநேரத்திற்கும் மேல் அலையாடி முன்னைய உலகச் சாதனையை முறியடித்தார்.
முன்னைய சாதனை - 30 மணிநேரம் 11 நிமிடங்கள்.
நுங்குமீன்கள், கருங்கடல் ஆகிய சவால்களைத் தைரியமாக எதிர்கொண்டார் ஜான்ஸ்டன். இரவில் கடலைக் காண ஏதுவாக விளக்குகளும் பொருத்தப்பட்டன.
10 வருடங்களுக்கு முன்பு அவரின் தந்தை தற்கொலை செய்து மாண்டார். அதை முன்னிட்டு 200,000 ஆஸ்திரேலிய டாலரை மனநலச் சேவைகளுக்காகத் திரட்டும் இந்த முயற்சியில் இறங்கினார் ஜான்ஸ்டன்.
ஆதரவளித்த நூற்றுக் கணக்கானோருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
-AFP