Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சிங்கப்பூர் பேட்மின்ட்டன் விளையாட்டாளர் இயோ ஜியா மின்னுக்கு COVID-19 உறுதி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பேட்மின்ட்டன் விளையாட்டாளர் இயோ ஜியா மின்னுக்கு COVID-19 உறுதி

(படம்: AP Photo/Dita Alangkara)

இந்தியப் பொதுவிருது badminton போட்டியில் இருந்து விலகிய சிங்கப்பூர் விளையாட்டு வீராங்கனை இயோ ஜியா மின் (Yeo Jia Min) COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை, கடுமையான காய்ச்சல் காரணமாக 22 வயது இயோ போட்டியில் இருந்து விலகினார்.

தற்போது சிங்கப்பூர் திரும்பிவிட்டதாகவும் தமக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் Instagram பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அரை இறுதிச் சுற்று ஆட்டத்தில், இயோவை எதிர்த்துப் போட்டியிடவிருந்த விளையாட்டாளர் போட்டி ஏதும் இன்றி அதில் வெற்றி பெற்றார்.

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சில விளையாட்டாளர்கள், கிருமித்தொற்றுக் காரணமாக அந்தப் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa