Skip to main content
Barcelona குழுவில் எண் 10 சட்டையின் புதிய சொந்தக்காரர்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

Barcelona குழுவில் எண் 10 சட்டையின் புதிய சொந்தக்காரர்?

வாசிப்புநேரம் -
Barcelona குழுவில் எண் 10 சட்டையின் புதிய சொந்தக்காரர்?

(படம்: MANAURE QUINTERO / AFP)

வெளியீடு : 17 Jul 2025 08:52AM புதுப்பிப்பு : 17 Jul 2025 11:56AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பார்சலோனா குழுவின் எண் 10 சட்டையை லமீன் யமால் (Lamine Yamal) பெற்றுள்ளார்.

முன்னதாக அந்தச் சட்டையை லயனல் மெஸ்ஸி (Lionel Messi) அணிந்திருந்தார்.

"மெஸ்ஸி அவருக்கான பாதையில் சென்றார். நான் எனக்கான பாதையை அமைத்துக்கொள்வேன்"

என்று 18 வயது யமால் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடுமையாக உழைத்து ரசிகர்களை மகிழ்விக்க முயற்சி செய்யப்போவதாக அவர் சொன்னார்.

யமால் பார்சலோனா குழுவில் 2031ஆம் ஆண்டு வரை விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார்.

குழுவின் ஆக அதிகச் சம்பளம் பெறும் விளையாட்டாளர்களில் ஒருவராக அவர் வளர்ந்துவருகிறார்.

2023ஆம் ஆண்டு 15ஆவது வயதில் அவர் பார்சலோனா குழுவில் சேர்ந்தார்.

இதுவரை அவர் குழுவில் 25 கோல்களைத் தந்திருக்கிறார்.

முந்தைய பருவங்களில் அவர் எண் 41, 27, 19 ஆகிய சட்டைகளை அணிந்து விளையாடினார்.

பார்சலோனாவின் எண் 10 சட்டையை டியகோ மரடோனா (Diego Maradona), ரொனால்டினியோ (Ronaldinho), ரிவால்டோ (Rivaldo) ஆகிய பிரபல காற்பந்து வீரர்கள் அணிந்திருக்கின்றனர்.

மெஸ்ஸி பார்சலோனாவிலிருந்து விலகிய பின்பு 2021ஆம் ஆண்டு எண் 10 சட்டை அன்சு பத்திக்கு (Ansu Fati) வழங்கப்பட்டது.

ஆனால் தொடர் காயங்களால் அவரால் அதிகம் விளையாட முடியவில்லை.

இந்த மாதம் (ஜூலை) அவர் மொனாக்கோவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்