Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஓமக்ரான் கிருமியைச் சமாளிக்குமா பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக்?

ஓமக்ரான் கிருமியைச் சமாளிக்குமா பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக்?

வாசிப்புநேரம் -
ஓமக்ரான் கிருமியைச் சமாளிக்குமா பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக்?

(படம்: AFP/Noel Celis)

பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது விளையாட்டுக் கிராமத்தில் COVID-19 நோய்ப்பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சீனா மிகக் கவனமாக உள்ளது.

அதேநேரம் உலக நாடுகளில் ஓமக்ரான் கிருமி மிக வேகமாகப் பரவிவருவது ஏற்பாட்டுக்குழுவுக்குச் சவாலாக அமைந்துள்ளது.

2,000-க்கும் அதிகமான விளையாட்டாளர்கள், போட்டிக்குத் தொடர்புடைய சுமார் 25,000 பேர் விளையாட்டு கிராமத்தில் இருப்பார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள்.

போட்டியில் பங்குபெறுபவர்களுக்கு ஏற்பாட்டுக்குழு கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் ஏற்கனவே பல சோதனைகளைச் செய்து எல்லா நிலவரத்திற்கும் தயாராகின்றனர்.

சீனாவில் சில ஓமக்ரான் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா நீண்டகாலமாகக் கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகிறது.

-Reuters/dv 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்