சட்டம், ஒலிம்பிக் கோட்பாடுகளுக்கு எதிராக நடந்துகொள்ளும் விளையாட்டாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும்: பெய்ச்சிங் 2022 அதிகாரி

(படம்: Noel Celis / AFP)
சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கடுமையான விதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் விதிமுறைகள், ஒலிம்பிக் கோட்பாடுகள் போன்றவற்றை மீறும் ஒலிம்பிக் விளையாட்டாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று பெய்ச்சிங் 2022 ஏற்பாட்டுக்குழு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இணையம்வழியாக அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் நடத்திய விளக்கச் சந்திப்பில் அதுபற்றிப் பேசப்பட்டது.
சீன விதிகளையோ, ஒலிம்பிக் கோட்பாடுகளையோ மீறுவோருக்கு 'போட்டி விளையாட்டாளர்' என்ற அங்கீகாரமும் ரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.