Ballon d'Or காற்பந்து விருது - மெஸ்ஸியும் இல்லை... ரொனால்டோவும் இல்லை...

Reuters
Ballon d'Or காற்பந்து விருது நியமனங்களில் இம்முறை கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) பெயரோ லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) பெயரோ இடம்பெறவில்லை.
2003ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த இருவரின் பெயர்களும் விடுபட்டிருப்பது இது முதன்முறை.
நியமனம் பெற்றுள்ள 30 பேரில் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாமும் (Jude Bellingham) ஒருவர்.
ஐந்து முறை விருதை வென்றுள்ள போர்ச்சுகலின் ரொனால்டோ கடந்த ஆண்டும் நியமனம் பெறத் தவறினார்.
கடந்த ஆண்டு சாதனையளவாக எட்டாவது முறை விருதை வென்ற அர்ஜென்ட்டினாவின் மெஸ்ஸியும் பட்டியலில் இல்லை.
அவர் 16 முறை விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு கோப்பா அமெரிக்கா போட்டியில் அர்ஜென்ட்டினா வெற்றிபெற்றபோதும் மெஸ்ஸிக்கு இம்முறை நியமனம் கிடைக்கவில்லை.
யூரோ 2024 போட்டியின் வெற்றியாளர்களான ஸ்பெயினுக்கு ஆறு நியமனங்கள்.
பார்சலோனா குழுவுக்கு ஆடும் 17 வயது லமின் யமால் (Lamine Yamal) அவர்களில் ஒருவர்.
Champions League போட்டியில் வென்ற ரியால் மட்ரிட் குழுவுற்கு ஏழு நியமனங்கள்.
பிரான்சின் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe), இங்கிலாந்தின் பெல்லிங்ஹாம், பிரேசிலின் விநிசியஸ் ஜூனியர் (Vinicius Junior) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
இவ்வாண்டு விருதளிப்பு விழா பாரிஸில் அடுத்த மாதம் 28ஆம் தேதி நடைபெறும்.