Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Spain La Liga: பார்சலோனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் ரியால் மட்ரிட்

வாசிப்புநேரம் -
ஸ்பெயின் La Liga ஆட்டத்தில் ரியால் மட்ரிட் (Real Madri) 4-0 என்ற மிகப்பெரிய கோல் கணக்கில் எல்சே (Elche) காற்பந்துக் குழுவை வீழ்த்தியது.

இதன் வழி பட்டியலில் முன்னணியில் இருக்கும் பார்சலோனாவுடனான புள்ளி வித்தியாசத்தை 8ஆகக் குறைத்துள்ளது ரியால்.

ஆட்டம் தொடங்கிய 8ஆவது நிமிடத்தில் ரியாலுக்கு மார்கோ அஸேன்சியோ (Marco Asensio) கோல் அடித்தார்.

அவரை அடுத்து கரீம் பென்ஸீமா (Karim Benzema) அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ரியாலின் 4ஆவது கோலை லூக்கா மோட்ரீச் (Luka Modric) போட்டார்.

La Ligaவில் பார்சலோனாவும் ரியாலும் இதுவரை 21 ஆட்டங்களை முடித்துள்ளன. பார்சலோனா 56 புள்ளிகள் வைத்துள்ளது. ரியால் 48 புள்ளிகளுடன் இருக்கிறது.

அண்மையில் ரியால் 5ஆவது முறையாக கிளப் உலகக் கிண்ணத்தை (Club World Cup) வென்றது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்