Skip to main content
கண் பார்வையற்ற மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

கண் பார்வையற்ற மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி - இந்தியா வெற்றி

வாசிப்புநேரம் -
கண் பார்வையற்ற மகளிர் கிரிக்கெட்  உலகக் கிண்ணப் போட்டி - இந்தியா வெற்றி
(படம்: Ishara S. KODIKARA / AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கண் பார்வையற்ற மகளிர் கிரிக்கெட் T20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இறுதிச் சுற்று இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது.

இந்தியாவும் நேப்பாளமும் பொருதின.

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேப்பாளத்தை வீழ்த்தியது.

கண் பார்வையற்ற பெண்களுக்காக முதன்முறை நடத்தப்படும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இதுவே.

போட்டியை இந்தியாவும் இலங்கையும் இணைந்து ஏற்று நடத்தின.

கண் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் வெள்ளை பிளாஸ்டிக் பந்து பயன்படுத்தப்படுகிறது.

அந்தப் பந்துக்குள் சிறிய குண்டுகள் இருக்கும்.

பந்தைத் தூக்கி எறியும்போது அந்தச் சத்தத்தைக் கொண்டு வீரர்கள் விளையாடுவர்.

ஓர் அணியில் மொத்தம் 11 வீரர்கள் இருப்பர்.

அவர்களில் குறைந்தது 4 பேராவது முற்றிலும் கண் பார்வை இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

எஞ்சியோருக்கு சிறிதளவு கண் பார்வை இருக்கலாம்.

வீரர்கள் கண்களைக் கட்டிக்கொண்டுதான் விளையாடுவார்கள்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்