Skip to main content
தும்மலால் ஆட்டத்தைத் தவறவிட்ட விளையாட்டாளர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

தும்மலால் ஆட்டத்தைத் தவறவிட்ட விளையாட்டாளர்

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் காற்பந்து லீக் கிண்ணப் போட்டியின் தகுதிச் சுற்று...

Bolton Wanderers அணிக்கும் Barrow கழகக் காற்பந்துச் சங்க அணிக்கும் இடையே ஆட்டம்...

Bolton Wanderers குழுவின் விளையாட்டாளரால் ஆட்டத்தில் கலந்துகொள்ளமுடியவில்லை... காரணம்? தும்மல்.

26 வயது விளையாட்டாளர் விக்டர் அடேபொயேயோ (Victor Adeboyejo) ஒரு முறை தும்மினார்..

முதுகு வலி ஏற்பட்டது... விலா எலும்புகளுக்கு இடையே வலி ஏற்பட்டது....

அவர் ஆட்டத்திலிருந்தே விலகிவிட்டார்.

அடேபொயேயோவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

"விக்டர் மிகவும் வலிமையானவர். அவருடைய தும்மலும் வலிமையானது," என்று குழுவின் மேலாளர் இயன் எவட் (Ian Evatt) உள்ளூர் ஊடகங்களிடம் கூறினார்.

அடேபொயேயோ இல்லை என்றாலும் Bolton Wanderers ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

அது 3க்கு 2 என்ற கோல் கணக்கில் Barrow அணியை வீழ்த்தியது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்