Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சிங்கப்பூரின் லோ கீன் இயூ இந்தியப் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் லோ கீன் இயூ இந்தியப் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

(படம்: Jeremy Long)

சிங்கப்பூரின் பேட்மிண்டன் விளையாட்டாளர் லோ கீன் இயூ (Loh Kean Yew) இந்திய பேட்மிண்டன் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெறவிருந்த அரையிறுதிச் சுற்றில் லோ கனடாவின் பிராயன் யாங்கைச் (Brian Yang) சந்திக்கவிருந்தார்.

ஆனால் யாங் போட்டியிலிருந்து விலகியதையடுத்து, லோ இறுதிச்சுற்றுக்குச் சென்றுள்ளார்.

உடல் நலமில்லாததால் யாங் விலகியதாகக் கூறப்படுகிறது.

இறுதிச்சுற்றில் லோ இந்தியாவின் லக்ஷ்யா சென் (Lakshya Sen) அல்லது மலேசியாவின்  இங் ஸி யோங்கைச் (Ng Tze Yong) சந்திப்பார்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் போட்டி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்மை நாள்களில் நோய்த்தொற்று உறுதியான சில விளையாட்டாளர்கள் போட்டியிலிருந்து விலகி வருகின்றனர்.

இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் டெர்ரி ஹீ யோங் காய், டான் வேய் ஹான் ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அவர்களுடன் இறுதிச்சுற்றில் போட்டியிடவிருந்த ரஷ்யர்கள் கிருமித்தொற்று காரணமாகப் போட்டியிலிருந்து விலகினர்.

-CNA/ga(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa