Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம்... கெமரூன், செர்பியா அணிகள் கோல் மழை...

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் G பிரிவைச் சேர்ந்த கெமரூனும் (Cameroon) செர்பியாவும் (Serbia) பொருதின. 

விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் முதற்பாதி முடிவடைந்து செர்பியா முன்னணி வகித்தது.

கெமரூன் அணி, 63ஆவது, 66ஆவது நிமிடங்களில் மேலும் 2 கோல்களைப் புகுத்தி ஆட்டத்தைச் சமநிலைப்படுத்தியது.

3-3 எனும் கோல் கணக்கில் ஆட்டம் முடிவடைந்தது.

இரவு 9மணிக்கு H பிரிவின் தென் கொரியாவும் கானாவும் மோதும் ஆட்டம் இடம்பெறவிருக்கிறது. 

நள்ளிரவு 12மணிக்கு நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் G பிரிவின் பிரேசிலும் சுவிட்ஸர்லந்தும் மோதுகின்றன. 

அதிகாலை 3 மணிக்கு H-பிரிவின் போர்ச்சுகலுக்கும் உருகுவேக்கும் இடையிலான போட்டி தொடங்கும். 

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்