Skip to main content
மெஸ்ஸியின் கனவைக் கலைக்குமா காபோ கனவு?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

மெஸ்ஸியின் கனவைக் கலைக்குமா காபோ கனவு?

வாசிப்புநேரம் -
மெஸ்ஸியின் கனவைக் கலைக்குமா காபோ கனவு?

படம்: IMAGN IMAGES via Reuters/Maria Lysaker

வெளியீடு : 27 Jun 2026 11:59AM புதுப்பிப்பு : 27 Jun 2026 12:58PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அறிமுக உலகக்கிண்ண தொடரிலேயே காபோ வெர்ட் (Cape Verde) அணி வரலாறு படைத்துள்ளது.

சவுதி அரேபியாவுடன் நடந்த போட்டி கோல் ஏதுமின்றிச் சமநிலையில் முடிந்தது.

இதன் மூலம் H பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து 32 அணிகள் சுற்றுக்கு அது முன்னேறியது.

அடுத்த சுற்றில் அர்ஜென்டினாவை காபோ வெர்ட் எதிர்கொள்கிறது.

லயனல் மெஸ்ஸி (Lionel Messi) தலைமையிலான அர்ஜென்டினாவுடன் அந்தப் போட்டி ஜூலை 3ஆம் தேதி மயாமியில் நடைபெறுகிறது.

காபோ வெர்ட் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் சமநிலை கண்டது.

அந்த அணி மூன்று புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரிவில் முதலிடம் பிடித்தது.

இரண்டு முறை உலகக்கிண்ணத்தை வென்ற நாடான உருகுவே இரண்டு புள்ளிகளுடன் வெளியேறியது.

முன்னதாக காபோ வெர்ட்டுக்கு எதிராக உருகுவே 2-2 என சமநிலை கண்டது.

இந்தப் பிரிவு முடிவுகளால் இங்கிலாந்து, போர்ச்சுகல், கானா, எகிப்து, பராகுவே ஆகிய அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்