Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்ற ஆக இளமையான டென்னிஸ் வீரர்

வாசிப்புநேரம் -
உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்ற ஆக இளமையான டென்னிஸ் வீரர்

ANGELA WEISS / AFP

ஸ்பெயினைச் சேர்ந்த 19 வயது டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்காரா (Carlos Alcaraz) Grand Slam விருதை முதல்முறையாக வென்றுள்ளார்.

உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்ற ஆக இளமையான டென்னிஸ் வீரர் என்ற பெருமை அவரைச் சேர்ந்துள்ளது.

அல்காரா அமெரிக்கப் பொது விருதுப் போட்டியின் இறுதிச் சுற்றில் நார்வேயின்  கேஸ்பர் ரூட்டுக்கு (Casper Ruud) எதிராக வெற்றி பெற்றார்.

செட் விவரம் 6க்கு 4, 2க்கு 6, 7க்கு 6 (7/1), 6க்கு 3. 

முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபல் நடால் (Rafael Nadal) Grand Slam விருதை முதல்முறையாக வென்றபோதும் அவரது வயது 19.

ஒரே ஆண்டில் தொடர்ந்து 4 பெரிய போட்டிகளில் வெற்றிபெற்றால் Grand Slam விருது கிடைப்பதுண்டு.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்