Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

'லிவர்பூல் ரசிகர்கள் கடுமையாக நடத்தப்பட்டனர்' - பிரிட்டிஷ் அமைச்சர் குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
'லிவர்பூல் ரசிகர்கள் கடுமையாக நடத்தப்பட்டனர்' - பிரிட்டிஷ் அமைச்சர் குற்றச்சாட்டு

(கோப்புப்படம்: Oli SCARFF / AFP)

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்றுக் காலை (மே 29) நடந்த Champions League இறுதியாட்டத்தின்போது லிவர்பூல் (Liverpool) காற்பந்து அணியின் ரசிகர்கள் கடுமையாக நடத்தப்பட்டதாகப் பிரிட்டிஷ் அமைச்சர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.  

சில ரசிகர்கள்மீது கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்ட அந்தச் சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் ஆராயவேண்டும் என்று அமைச்சர் பிராண்டன் லூவிஸ் (Brandon Lewis) கேட்டுக்கொண்டார். 

Champions League இறுதியாட்டத்தின்போது அரங்கவாயிலில் குழப்பம் ஏற்பட்டது. ஆட்டம் சுமார் 40 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது. பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மறுபரிசீலனை நடத்தப்படும் என்று ஐரோப்பியக் காற்பந்துச் சங்கம் கூறியது. 

மோசமாக நடத்தப்படும் அளவுக்குத் தனது ரசிகர்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று லிவர்பூல் காற்பந்துக் குழு கூறுகிறது. 

ஆனால் இங்கிலீஷ் ரசிகர்கள் மோசமாக நடந்துகொண்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறுகின்றனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்