Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

Champions League இறுதியாட்டத்தை இலவசமாகக் காண கழிவறையில் 27 மணி நேரம் மறைந்திருந்த ரசிகர்கள்

வாசிப்புநேரம் -
Champions League காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தை இலவசமாகக் காண இருவர் 27 மணி நேரம் அரங்கத்தின் கழிவறையில் ஒளிந்திருந்தனர்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த அந்த இருவரும் இறுதியாட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அரங்கத்தினுள் நுழைந்தனர்.

அங்குள்ள கழிவறையில் மறைந்துகொண்டதாக இருவரும் VRT செய்தி ஊடகத்திடம் தெரிவித்தனர்.

கழிவறையின் வெளியே "பழுதாகியுள்ளது" என்று ஒட்டிவிட்டு ஒரு நாள் முழுவதும் உள்ளேயே காத்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தூங்க முடியவில்லை...

உட்கார்ந்தே இருக்க வேண்டிய நிலை...

கடினமாக இருந்தாலும் இருவரும் பொறுத்துக்கொண்டனர்.

ரசிகர்கள் கழிவறையைப் பயன்படுத்தும் சத்தம் வந்ததும் இருவரும் வெளியேறிவிட்டனர்.

மற்ற ரசிகர்களுடன் சேர்ந்து அரங்கத்தினுள் நுழைந்ததாக அவர்கள் கூறினர்.

இறுதியாட்டத்தில் PSG 5 கோல்கள் போட்டு கோப்பையை வென்றது.

இறுதியாட்டத்தைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டுகள் 100 வெள்ளி முதல் 1,100 வெள்ளி வரை விற்கப்பட்டன.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்