8 கோல்களுடன் செல்சி அபார வெற்றி
வாசிப்புநேரம் -
UEFA கான்ஃபரன்ஸ் லீக் (Conference League) ஆட்டத்தில் செல்சி 8 - 0 என்ற கோல் கணக்கில் அர்மேனியாவின் ஃப்சி நோவாவை (FC Noah) வீழ்த்தியுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் டொசின் அடரபியோயோ (Tosin Adarabioyo) முதல் கோலைப் போட்டார்.
அதன் பின் அடுத்தடுத்துக் கோல் போட்டு அசத்தியது செல்சி. அது முதற்பாதியின் முடிவிலேயே ஆறு கோல்களுடன் முன்னணி வகித்தது.
இடைவேளைக்குப் பிறகுச் செல்சி சற்று நிதானமாகவே ஆடியது. இருப்பினும் கிரிஸ்ட்டஃபர் இங்கூங்கு (Christopher Nkunku) மேலும் இரு கோல்களைப் புகுத்தி தனது அணிக்கு அபார வெற்றியைத் தேடித் தந்தார்.
முன்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் தொடர் வெற்றிகளுடன் கான்ஃபரன்ஸ் லீக் பட்டியலில் செல்சி முதலிடத்தில் உள்ளது.

ஆதாரம் : Reuters