Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

English Premier League காற்பந்துக் குழுவான Chelsea-இன் விற்பனை

வாசிப்புநேரம் -
English Premier League காற்பந்துக் குழுவான Chelsea-இன் விற்பனை

AP Photo/Alastair Grant

English Premier League காற்பந்துக் குழுவான Chelsea, 
அமெரிக்கா வழிநடத்தும் சில நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் விற்கப்பட்டுள்ளது. 

அதன் ரஷ்ய உரிமையாளர் ரோமன் ஆப்ரமோவிச் (Roman Abramovich) மீது பிரிட்டிஷ் அரசாங்கம் பொருளியல் தடை விதித்ததைத் தொடர்ந்து Chelsea மார்ச் மாதம் விற்பனைக்கு வந்தது.

ஆப்ரமோவிச் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர். 

Chelsea-யை 5.3 பில்லியன் டாலருக்கு வாங்கிய தரப்பினரில் அமெரிக்கச் செல்வந்தர்கள் டோட் போலி(Todd Boehly), மார்க் வால்டர் (Mark Walter) ஆகியோரும் அடங்குவர்.

Clearlake எனும் மூலதன நிறுவனமும் குழுவை வாங்கியுள்ளது.

விற்பனையில் ஈட்டப்படும் தொகை ஆப்ரமோவிச் கைக்குப் போகமாட்டாது. அது அறப்பணிக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்