Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

முன்பு தடைசெய்யப்பட்ட விளையாட்டு... அதில் சீனாவுக்கு இப்போது ஒலிம்பிக் தங்கப் பதக்கம்..

வாசிப்புநேரம் -
ஒரு காலத்தில் சீனாவில் தடைசெய்யப்பட்ட விளையாட்டு இப்போது அந்த நாட்டிற்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

தேசத் தந்தை மா சே துங் (Mao Zedong) காலத்தில் பெண்கள் குத்துச் சண்டை தடை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவைச் சேர்ந்த பெண் குத்துச் சண்டை வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றனர்.

வழக்கமாக டென்னிஸ் போட்டி நடக்கும் Roland Garros அரங்கில் குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது.

கிட்டத்தட்ட 15,000 பேர் பார்க்க ஏதுவாக அரங்கில் குத்துச்சண்டைப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெண்களின் குத்துச்சண்டைப் போட்டி ஒலிம்பிக் போட்டிகளில் 2012ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது.

அந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடத்தப்பட்டன.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்