Skip to main content
வரலாறு படைக்க களமிறங்கும் கனடா, தென்னாப்பிரிக்கா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

வரலாறு படைக்க களமிறங்கும் கனடா, தென்னாப்பிரிக்கா

வாசிப்புநேரம் -
வரலாறு படைக்க களமிறங்கும் கனடா, தென்னாப்பிரிக்கா

படம்: Harry How / GETTY IMAGES NORTH AMERICA / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கனடாவும் தென்னாப்பிரிக்காவும் உலகக்கிண்ணக் காற்பந்து knockout சுற்றின் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

2 அணிகளும் முன்பு உலகக்கிண்ணத்தின் அந்தச் சுற்றை எட்டியதில்லை. 

எனவே இரு அணிகளுக்கும் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரமாண்டமான சோஃபை விளையாட்டு அரங்கில் போட்டி நடைபெறுகிறது.

உலகக்கிண்ணத்தில் இந்த முறை 48 அணிகள்  பங்கேற்கலாம் என்பதால் ஆப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த முறை ஒன்பது ஆப்பிரிக்க அணிகள் knockout  சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

குழுப் பிரிவில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் போட்டியில் மெக்சிகோவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்று வெளியேறும் நிலைக்குச் சென்றது.

அடுத்த போட்டியில் தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறை knockout சுற்றுக்கு முன்னேறியது.

கனடாவும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் கடைசிக் குழு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

அதனால் சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பை இழந்த கனடா, அமெரிக்காவுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்