Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆட்டத்தின் முற்பாதியில் 4 கோல்கள்.... மகிழ்ச்சி வெள்ளத்தில் செல்ஸி ஆட்டக்காரர்

வாசிப்புநேரம் -
செல்ஸி (Chelsea) காற்பந்து அணி வீரர் கோல் பாமர் (Cole Palmer) இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.

அவர் கடந்த சனிக்கிழமை (28 செப்டம்பர்) பிரைட்டனுக்கு (Brighton) எதிரான ஆட்டத்தின் முதல் பாதியில் செல்சிக்கு 4 கோல்கள் போட்டார்.

இதன்வழி இங்கிலீஷ் பிரிமியர் லீக் வரலாற்றில் அவ்வாறு செய்த முதல் ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார் பாமர்.

பாமர் ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் செல்ஸிக்கு முதல் கோலடித்து ஆட்டத்தைச் சமன்படுத்தினார்.

அடுத்த 10 நிமிடத்தில் ஒரு பெனால்டி, ஒரு 'free kick' என இரு கோல்கள் போட்டு அசத்தினார். முதல் பாதி முடிய 10 நிமிடம் இருந்தபோது செல்ஸிக்கு 4ஆம் கோலைப் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் பாமர்.

ஆட்டம் 4-2 எனும் கோல் எண்ணிக்கையில் செல்ஸிக்குச் சாதகமாக முடிந்தது.

இங்கிலீஷ் பிரிமியர் லீக் பட்டியலில் 13 புள்ளிகளுடன் செல்சி 4ஆம் நிலையில் உள்ளது.

முதலிடத்தில் 15 புள்ளிகளுடன் லிவர்பூல் (Liverpool) இருக்கிறது.
ஆதாரம் : CNN

மேலும் செய்திகள் கட்டுரைகள்