Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

களைகட்டிய காமன்வெல்த் விளையாட்டுகளின் தொடக்க விழா (படங்கள்)

வாசிப்புநேரம் -

பிரிட்டனின் பர்மிங்ஹமில் (Birmingham) 2022 காமன்வெல்த் விளையாட்டுகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளன.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு அங்குப் பெரிய அளவில் விளையாட்டுகள் மீண்டும் நடைபெறவிருக்கின்றன.

காமன்வெல்த் விளையாட்டுகளைத் தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) நகரம் ஏற்றுநடத்தவிருந்தது.

அது அதன் வாக்குறுதிகளைப் பூர்த்திசெய்யத் தவறியதைத் தொடர்ந்து விளையாட்டுகளை ஏற்றுநடத்த பர்மிங்ஹம் முன்வந்தது.

விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யும் நகரங்களுக்கு வழக்கமாக 6, 7 ஆண்டுகள் வரை அவகாசம் இருக்கும்.ஆனால் பர்மிங்ஹமிற்கு 4 ஆண்டுகள் மட்டுமே இருந்தன. 


விளையாட்டுகளின் தொடக்க விழாவில் சுமார் 30,000 பார்வையாளர்கள் நேரடியாகக் கலந்துகொண்டனர்.

பில்லியனுக்கும் அதிகமானோர் விழாவின் ஒளிபரப்பைக் கண்டுரசித்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 5,000 விளையாட்டாளர்கள் தங்களது நாட்டின் கொடியை ஏந்தியவாறு அணிவகுத்தனர்.

சிங்கப்பூர் அணியில் டெர்ரி ஹீ (Terry Hee), அய்னி முகமது யாஸ்லி (Aini Mohamad Yasli) இருவரும் கொடியை ஏந்தினர்.

"கொடி நினைத்ததைவிட கனமாக இருந்தது! அணியை வழிநடத்தியதில் பெருமிதம் கொள்கிறேன்.," என்று டெர்ரி ஹீ  சொன்னார்.

"டெர்ரியுடன் இணைந்து சிங்கப்பூரின் கொடியை ஏந்தியதில் பெருமிதம் கொள்கிறேன். மிகவும் ஆவலாக உள்ளது. விளையாட்டுகளில் என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்வேன்!" என்று அய்னி முகமது யாஸ்லி கூறினார்.

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து  60க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.

விளையாட்டுகள் 11 நாள்கள் நீடிக்கும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்