Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுகளில்... சில சாதனைகள்

வாசிப்புநேரம் -

காமன்வெல்த் விளையாட்டுகளில் சில சாதனைகள் படைக்கப்பட்டன.

பேட்மின்ட்டன் கலப்புக் குழுப் பிரிவின் காலிறுதிப் போட்டிகளில் சிங்கப்பூர் மூன்றுக்கு பூஜ்யம் என்ற ஆட்டக் கணக்கில் ஸ்காட்லந்தை வெற்றிகண்டது.

பின்னர் நடைபெறும் அரை இறுதிச்சுற்றில் சிங்கப்பூர், விருதைத் தற்காக்கும் இந்தியாவுடன் மோதுகிறது.

பெண்கள் நான்குக்கு 200 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் ஆஸ்திரேலியா புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியக் குழுவின் நால்வர் அணி, 7 நிமிடம் 39 புள்ளி 29 விநாடிகளில் போட்டியை முடித்தது.

சீனாவின் முன்னைய  சாதனை நேரத்தைவிட இது சுமார் ஒரு விநாடி குறைவு.

இந்தப் போட்டியில் கனடாவுக்கு வெள்ளி, இங்கிலாந்துக்கு வெண்கலம்.

ஆண்கள் 100 மீட்டர் நெஞ்சு நீச்சலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்பி (James Wilby) தங்கத்தைக் கைப்பற்றினார்.

59.25 விநாடிகளில் அவர் போட்டியை முடித்தார்.

அவரின் சகநாட்டவர் ஆடம் பீட்டி (Adam Peaty) அந்த வாய்ப்பை நழுவவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாத முறிவிலிருந்து அண்மையில் குணமடைந்த ஆடம் பீட்டி நான்காம் நிலையில் வந்தார்.

வெள்ளியையும், வெண்கலத்தையும் ஆஸ்திரேலியா வென்றது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்