Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா 100 மீட்டர் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறினார்

வாசிப்புநேரம் -

தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா (Shanti Pereira) காமன்வெல்த் விளையாட்டுகளின் 100 மீட்டர் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிவிட்டார். 

இன்று (ஆகஸ்ட் 4) காலை நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் அவர் 1.57 விநாடிகளில் 100 மீட்டர் ஒட்டத்தை முடித்தார். 

தகுதிச் சுற்றுகளில் அவர் 11.48 விநாடிகளில் வந்து புதிய தேசிய சாதனையைப் புரிந்தார். 

அரையிறுதிச் சுற்றில் சாந்தி பெரேரா 7ஆவது இடத்தில் வந்தார். 

கரீபிய நாடான செயிண்ட் லூசியாவைச் சேர்ந்த ஜூலியன் அல்ஃப்ரெட் (Julien Alfred) 11.04 விநாடிகளில் வந்து முதலிடத்தைப் பிடித்தார். 

இறுதிச்சுற்றில் ஜமைக்காவின் இலேன் தோம்ப்சன்-ஹிரா (Elaine Thompson-Herah) முதலிடத்தைப் பிடித்துத் தங்கம் வென்றார். 

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 10.95 விநாடி. 

அவர் 4 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.

பிர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 போட்டிகளை meWATCH தளத்தில் நேரடியாகக் காணலாம். www.mewatch.sg/cwg2022 எனும் தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள!

பார்க்கத் தவறிய விளையாட்டுகளின் முக்கியத் தருணங்களை YouTube தளத்தின் Mediacorp Entertainment வழி கண்டு ரசிக்கலாம்!

ஆதாரம் : CNA/nh(gr)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்