காமன்வெல்த் விளையாட்டுகள்: சில முடிவுகள்
காமன்வெல்த் விளையாட்டுகளில், உடற்குறையுள்ளோருக்கான பிரிவின் கீழ் ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் சிங்கப்பூருக்கு வெள்ளி.
23 வயது டோ வெய் சூங் (Toh Wei Soong) 29.10 விநாடிகளில் போட்டியை முடித்தார்.
தங்கத்தை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
வெண்கலம் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றது.
ஆண்கள் நான்குக்கு 200 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் ஆஸ்திரேலியா மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஆஸ்திரேலியக் குழுவின் நால்வர் அணி, 7 நிமிடம் 4.96 விநாடிகளில் போட்டியை முடித்தது.
இங்கிலாந்து எடுத்துக்கொண்ட நேரத்தைவிட அது சுமார் ஒன்றரை விநாடி குறைவு.
அந்தப் போட்டியில் ஸ்காட்லந்துக்கு வெண்கலம்.
பெண்கள் 10 கிலோமீட்டர் சைக்கிளோட்டப் பந்தயத்தில் இங்கிலாந்து அதன் முதல் தங்கத்தைக் கைப்பற்றியது.
30 வயது லோரா கென்னி (Laura Kenny) தங்கம் வென்றார்.
நியூஸிலந்துக்கு வெள்ளி.
கனடாவுக்கு வெண்கலம்.
போட்டிக்கு இடையே, நியூஸிலந்தின் பிரையோனி போத்தாவும் (Bryony Botha) இந்தியாவின் மீனாக்ஷியும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்து நேர்ந்தது.
பின்னர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.