உலகக் கிண்ணத்தில் இரட்டை வெற்றி: அரிய பட்டியலில் அர்ஜென்ட்டினா இணையுமா?
படம்: Reuters
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் வாகை சூடுவது பல நாடுகளின் கனவு.
அதுவே தொடர்ந்து இருமுறை வெல்வது இரட்டிப்பு மகிழ்ச்சி தானே?
ஆனால் அது எளிய இலக்கு அல்ல.
இதுவரை இரண்டு நாடுகள் மட்டுமே அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளன.
முதன் முதலில் வரலாறு படைத்த நாடு இத்தாலி (Italy).
அது 1934, 1938 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து வெற்றி கண்டது.
1934ஆம் ஆண்டு இத்தாலிக்கும் செக்கோஸ்லோவாக்கியாவுக்கும் (Czechoslovakia) இடையே இறுதிச்சுற்று நடந்தது.
2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது; முதல்முறையாக உலகக் கிண்ணக் கோப்பையை வசப்படுத்தியது.
பின்னர் 1938ஆம் ஆண்டு இத்தாலி ஹங்கேரியை (Hungary) எதிர்த்துக் களம் கண்டது.
விறுவிறுப்பான போட்டி 4 - 2 என்ற கோல் கணக்கில் இத்தாலிக்குச் சாதகமாக முடிந்தது.
இத்தாலியை அடுத்து வரலாற்றுச் சாதனை படைத்த ஒரே நாடு பிரேசில் (Brazil).
1958ஆம் ஆண்டின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் சுவீடனை (Sweden) எதிர்த்துப் போட்டியிட்டது.
சொந்த மண்ணில் களமிறங்கிய சுவீடன் 5 - 2
கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
சுவீடனை அடுத்து பிரேசில் செக்கோஸ்லோவாக்கியாவை வீழ்த்தி 1962இல் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டது.
3 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் முடிவுற்றது.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்ட்டினா வெற்றி பெற்றது.
இந்த ஆண்டின் போட்டியிலும் இறுதிச்சுற்றில் விளையாடுகிறது.
இத்தாலி, பிரேசில் வரிசையில் அர்ஜென்ட்டினா முத்திரை பதிக்குமா என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.