Skip to main content
மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்லுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்லுமா?

வாசிப்புநேரம் -
மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிச் சுற்று நாளை (2 நவம்பர்) இந்தியாவின் மும்பை நகரில் நடைபெறவுள்ளது.

நேற்று முன்தினம் (30 அக்டோபர்) நடந்த அரை இறுதிச் சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

இறுதிச் சுற்றில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதவுள்ளன.

இந்திய மகளிர் அணியின் பிரமாண்டமான வெற்றி, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

இளம் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை அதிகமான பெற்றோர் ஆதரிக்க அது வழிவகுக்கும் என்று கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஒருவர் கூறினார்.

இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் கிண்ணம் ஏற்கனவே பல சாதனைகளைப் படைத்துவிட்டது.

முதல் 13 ஆட்டங்களை 60 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டனர்.

2022ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் கிண்ண ஆட்டங்களைப் பார்த்தோரின் எண்ணிக்கையைவிட அது 5 மடங்கு அதிகம்.

இம்மாதம் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் பொருதிய ஆட்டத்தை 28.4 மில்லியன் பேர் பார்த்தனர்.

அதுவே ஆக அதிகமாகப் பார்க்கப்பட்ட மகளிர் அனைத்துலக ஆட்டம்.

இந்த ஆண்டு வெற்றிபெறும் அணிக்குக் காத்திருக்கிறது 13.88 மில்லியன் டாலர் பரிசு.

ஈராண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் பரிசுத் தொகையைவிட அது அதிகம்.

ஏற்கனவே இந்திய மகளிர் அணி இருமுறை இறுதிச் சுற்று வரை சென்று கிண்ணத்தை நழுவவிட்டிருக்கிறது.

இம்முறை வெல்லுமா? நாளை தெரியும்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்