Skip to main content
ரொனால்டோ சவுதி அணியிலிருந்து விலகுகிறாரா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ரொனால்டோ சவுதி அணியிலிருந்து விலகுகிறாரா?

வாசிப்புநேரம் -
ரொனால்டோ சவுதி அணியிலிருந்து விலகுகிறாரா?

(கோப்புப் படம்: REUTERS/Stringer)

வெளியீடு : 27 May 2025 10:30AM புதுப்பிப்பு : 27 May 2025 01:31PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காற்பந்துப் பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணியிலிருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.

சவுதி புரோ லீக் (Saudi Pro League) காற்பந்துப் போட்டி முடிந்து சில மணி நேரத்தில் "இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது" என்று ரொனால்டோ தமது சமூகத் தளப் பக்கத்தில் தெரிவித்தார்.

அந்தப் பதிவில் அவர் அல்-நாசர் சட்டை அணிந்திருந்தார்.

கதை இன்னும் எழுதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

40 வயது ரொனால்டோ 2022ஆம் ஆண்டு அல்-நாசர் அணியில் சேர்ந்தார்.

அந்த ஒப்பந்தம் விரைவில் முடிகிறது.

சவுதி புரோ லீக் போட்டியில் அல்-நாசர் அணி 3ஆவது இடத்தில் வந்தது.

தமது காற்பந்துப் பயணத்தை அல்-நாசருடன் முடித்துக்கொள்ளக்கூடும் என்று சென்ற ஆண்டு ரொனால்டோ கூறியிருந்தார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்