Skip to main content
ரொனால்டோ ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க முயற்சி: அல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ரொனால்டோ ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க முயற்சி: அல்-நாசர் குழு

வாசிப்புநேரம் -
காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக அல்-நாசர் காற்பந்துக் குழு தெரிவித்துள்ளது.

ரொனால்டோவுடன் ஒப்பந்தம் செய்யப் பல குழுக்கள் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் 40 வயது ரொனால்டோ "இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது" என்று தமது சமூகத் தளப் பக்கத்தில் தெரிவித்தார்.

அந்தப் பதிவில் அவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்-நாசர் சட்டை அணிந்திருந்தார்.

சவுதி அரேபியாவை காற்பந்து உலகில் பிரபலப்படுத்திய பெருமை ரோனால்டோவையே சேரும் என்று அல்-நாசர் குழுவின் இயக்குநர் சொன்னார்.

அல்-நாசர் குழுவுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் அடுத்த மாத (ஜூன்) இறுதியில் நிறைவுபெறும்.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்