Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வுபெறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

வாசிப்புநேரம் -
அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வுபெறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

படம்: Reuters/Hannah Mckay

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புகழ்பெற்ற காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக 234 முறை விளையாடி 146 கோல்களைப் போட்டுள்ளார்.

இது ஓர் உலகச் சாதனை. 

ஆனால் அண்மைய ஆண்டுகளில் ரொனால்டோவின் ஆட்டத்திறன் குறைந்து வந்தது.

கடந்த மாதம் நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) போட்டியில் தம்மை விளையாட அனுமதிக்காததால் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஜார்ஜ் ஜீசஸுடன் (Jorge Jesus) அவருக்கு மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து ரொனால்டோ உடனடியாக அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார்.

அவருக்கு 30 நாள் தடை விதிக்கப்பட்டது.

கடைசியாக அவர் இவ்வாண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் கலந்துகொண்டார்.

இம்முறை மூன்று கோல்களை அடித்தார். ஆனால் இறுதியில் 16 அணிகள் கொண்ட Knockout சுற்றில் போர்ச்சுகல் ஸ்பெயினிடம் தோல்வி கண்டது.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்