Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மைக் டைசன்... கிறிஸ்டியானோ ரொனால்டோ... அதே இடத்தில் காணப்பட்ட பிரபல விளையாட்டு வீரர்கள்

வாசிப்புநேரம் -
மைக் டைசன்... கிறிஸ்டியானோ ரொனால்டோ... அதே இடத்தில் காணப்பட்ட பிரபல விளையாட்டு வீரர்கள்

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Twitter/ESPNFC)

சவுதி அரேபியாவில் டாமி ஃபியூரி (Tommy Fury) என்ற பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரருக்கும் ஜேக் பால் (Jake Paul) என்ற அமெரிக்கக் குத்துச்சண்டை வீரருக்கும் இடையில் ஒரு போட்டி இடம்பெற்றது.

டிரியா விளையாட்டரங்கில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் ஜேக் பால் தோல்வியுற்றார். குத்துச்சண்டையில் அவருக்கு நேர்ந்த முதல் தோல்வி அது.

போட்டியைக் காண விளையாட்டுலகின் சில பிரபலங்கள் சென்றிருந்தனர். அவர்களில் காற்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனும் அடங்குவர்.

இருவரும் அதே இடத்தில் காணப்பட்ட காட்சிகள் சமூக ஊடகத்தில் பகிரப்படுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்