Skip to main content
ரொனால்டோ மீண்டும் போர்ச்சுகலுக்கு விளையாடுவாரா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ரொனால்டோ மீண்டும் போர்ச்சுகலுக்கு விளையாடுவாரா?

வாசிப்புநேரம் -
ரொனால்டோ மீண்டும் போர்ச்சுகலுக்கு விளையாடுவாரா?

(படம்: IMAGN IMAGES via Reuters/Maria Lysaker)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மீண்டும் போர்ச்சுகல் அணிக்கு விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்று டென்மார்க்குடன் போர்ச்சுகல் பொருதிய ஆட்டத்தில் அவர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

அதை முன்கூட்டியே அறிந்த 41 வயது ரொனால்டோ பயிற்சி முகாமிலிருந்து புறப்பட்டுவிட்டார்.

அவர் அணியுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடவிருந்தார்.

ஆட்டத்தை 4-2 எனும் கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (27 செப்டம்பர்) நார்வேயுடன் பொருதிய ஆட்டத்தின்போதும் ரொனால்டோ களமிறக்கப்படவில்லை.

போர்ச்சுகல் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவருடன் பேசியதாகவும் தேசிய அணியின் பயிற்சி முகாமைவிட்டு விலக முடிவெடுத்திருப்பதாகவும் ரொனால்டோ Instagram பக்கத்தில் தெரிவித்தார்.

விரைவில் உண்மையைச் சொல்லப்போவதாகவும் அவர் சொன்னார்.

தமக்கும் ரொனால்டோவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் ஜார்ஜ் ஜீசஸ் (Jorge Jesus) விளக்கினார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்